Our Office

1 St Street,
JJ Nagar, Old Pandikovil Stop,
Ring Road, Madurai - 625020.

Apps are only shown to registered people!
Download the app here:

DOWNLOAD APP !

நிமிர்ந்து நில்

பயிற்சிப்பட்டறை, நான்மாடக்கூடல்

தமிழ் இலக்கியச் சிறப்புகளையும், பெருமைகளையும், தனித்தன்மைகளையும் அனைவருக்கும் எளிமையாக எடுத்துரைப்பதே நிமிர்ந்து நில்லின் நோக்கமாகும். மத்திய மாநில அரசுகள் நடத்துகின்ற போட்டித் தேர்வுகளில் தமிழ்ப்பாடத்தை மையமாகக் கொண்டு படிப்போருக்கு உதவிபுரியும் வகையில் பாடங்களை எளிமையாக கற்பித்து, அதிக மாதிரி தேர்வுகளை நடத்தி நல்வழிகாட்டுவதே நிமிர்ந்து நில்லின் பணி.

Courses
PG TRB TAMIL -அரசு பள்ளிகளில் பதினொன்றாம் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு தமிழக அரசானது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வினை நடத்துகிறது

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு(PG - TRB)

அரசு பள்ளிகளில் பதினொன்றாம் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு தமிழக அரசானது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வினை நடத்துகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய பட்டதாரிகளே முதுகலை ஆசிரியராக நியமிக்கப்படுவர். முதுகலைப் பட்டத்துடன் கல்வியியல் பட்டம் முடித்தவர்களே இத்தேர்வினை எழுத தகுதி உள்ளவர்கள். பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். ஆசிரியர் தேர்வு வாரியமானது இத்தேர்வினை இணைய வழித்தேர்வாக நடத்தி வருகின்றது. இத்தேர்வு 150 மதிப்பெண்களைக் கொண்டது. அவரவர் முதன்மைப் பாடத்தில் 110 மதிப்பெண்களும் கல்வியியல் பாடத்தில் 30 மதிப்பெண்களும் பொதுஅறிவு பாடத்தில் 10 மதிப்பெண்களும் அடங்கியத் தேர்வாக இத்தேர்வு அமைந்திடும்.

இளங்கலை ஆசிரியர் போட்டித் தேர்வு(UG - TRB)

ஆசிரியர் தகுதித்தேர்வில் (TN TET) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கும் பொருட்டு தமிழக அரசானது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக இத்தேர்வினை நடத்துகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய பட்டதாரிகளே இளங்கலை ஆசிரியராக நியமிக்கப்படுவர். பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

© நிமிர்ந்து நில். All Rights Reserved. Designed by SKAP TECH